வெறுப்பு உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் மோடி.. ராகுல்காந்தி கடும் தாக்கு

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 07:21 AM IST

பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் கொண்டுள்ள கோபத்தை எதிர்காண முடியாமல், வெறுப்புணர்வுகளுக்கு பின்னால் மோடியும், அமித்ஷாவும் ஒளிந்து கொள்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில நாட்களாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். அதனால் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. பிரியங்கா காந்தி அந்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் டெல்லி திரும்பிய ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள இளைஞர்களே, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள். வேலையில்லா பிரச்னை, பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம் போன்ற காரணங்களால் உங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

அதனால்தான் மோடியும், அமித்ஷாவும், நமது அன்புக்குரிய நாட்டை பிரித்தாளுகிறார்கள். வெறுப்பு உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் அன்போடு பதிலளிப்பதன் மூலம் மட்டுமே நாம் அவர்களை தோற்கடிக்க முடியும்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.


More India News