உடுப்பி ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்

by எஸ். எம். கணபதி, Dec 29, 2019, 18:23 PM IST

உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் ஜீயர் ஸ்ரீவிஸ்வேஷா தீர்த்த சுவாமி, வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தார். இன்று காலை அவர் காலமானார். இதையடுத்து, உடுப்பி மடத்தில் இருந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள பசவனகுடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் எடியூரப்பா இறுதி மரியாதை செலுத்தினார். பக்தர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஜீயர் விஸ்வேஷா, கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி தட்சண கன்னடா மாவட்டத்தில் ராமகுஞ்சா எனும் கிராமத்தில் நாராயணாச்சார்யா, கமலாம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். தனது 8-வது வயதில் துறவு வாழ்கைக்குத் திரும்பி, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

பின்னர், பெஜாவர் மடத்தின் 33-வது ஜீயராக பொறுப்பேற்றார். ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்பட்டவர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீயர் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading உடுப்பி ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி மரணம்.. பிரதமர் மோடி இரங்கல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை