130 கோடி மக்களின் எதிர்பார்ப்பு பட்ஜெட்.. பிரதமர் மோடி ட்விட்

by எஸ். எம். கணபதி, Jan 8, 2020, 14:12 PM IST
Share Tweet Whatsapp

மத்திய பட்ஜெட்டிற்கு மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுேகாள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, வர்த்தக சங்கத்தினர், தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மத்திய அரசின் பட்ஜெட். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.

வரும் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மை கவர்ன்மென்ட் (MyGov) இணைய தளத்தில் தெரிவிக்க வேண்டும்.
இ்வ்வாறு பிரதமர் தெரிவித்திருக்கிறார்.


Leave a reply