நாடாளுமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டு முதல் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அதன்பிறகு, இந்த ஆண்டுக்கான பொருளாதா ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அதன்பின்பு, பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தப்படும். இந்த தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக மார்ச் 2ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும். ஏப்ரல் 3ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
.