டெல்லி போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் தீ..

by எஸ். எம். கணபதி, Jan 20, 2020, 10:58 AM IST

டெல்லியில் போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது.

டெல்லி அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிவில் லைன்ஸ் பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு இன்று காலையில் திடீரென தீப்பிடித்தது. இது தரைத்தளம் முழுவதும் தீப்பற்றிய நிலையில், முதல் தளத்திற்கும் தீ பரவியது.

இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்த தீவிபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து மின்சார ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியிருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வந்துள்ளது. எனினும், தீ விபத்துக்கு பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a reply