அயோத்திக்கு மார்ச் 7ல் உத்தவ் தாக்கரே செல்கிறார்..

by எஸ். எம். கணபதி, Jan 25, 2020, 11:39 AM IST

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, வரும் மார்ச் 7ம் தேதி அயோத்திக்கு செல்கிறார்.

மகாராஷ்டிராவில் கடந்த தேர்தலின் போது பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதால் கூட்டணி முறிந்தது. இதன்பிறகு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இதை எதிர்பாராத பாஜக, தற்போது எதிர்க்கட்சியாக போராடி வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டலாம் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கூறியதும், தான் அங்கு செல்லவிருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். ஆனால், அந்த சமயத்தில் மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதில் பாதிப்பு ஏற்பட்டு ஆட்சியமைக்க முடியாமல் போய் விடும் என்று உத்தவ் தாக்கரே தனது அயோத்திப் பயணத்தை ரத்து செய்தார்.
தற்போது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்குள் இந்துத்துவா, மதச்சார்பின்மை கொள்கைப் பிரச்னைகள் அவ்வப்ேபாது தோன்றினாலும் ஆட்சியை விட்டு கொடுப்பதில்லை என்பதில் அவை உறுதியாக உள்ளன. இந்த சூழலில், அயோத்திக்கு செல்ல உத்தவ் தாக்கரே முடிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், முதல்வர் உத்தவ் தாக்கரே வரும் மார்ச் 7ம் தேதி அயோத்தி செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

You'r reading அயோத்திக்கு மார்ச் 7ல் உத்தவ் தாக்கரே செல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை