தாஜ்மகாலை இரவில் பார்வையிடுவதற்கு ஆன்லைனில் டிக்கெட் கொடுப்பது பற்றி விளக்கம் கேட்டு தொல்லியல் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களிடம் தாஜ்மகாலுக்குள் சென்று பார்வையிடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்வையிடுவதற்கு ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்து தொல்லியல் துறை முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.