இன்று தொடங்கும் நாடாளுமன்றத் தொடரில், பொருளாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்துேவாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி, அந்த வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2வது பத்தாண்டின் முதல் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆகும். வரும் 10 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியான அஸ்திவாரத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த கூட்டத் தொடரில் முக்கியமாக பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறந்த முறையில் விவாதம் நடைபெற வேண்டும்.
பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் அதிகாரம் அளிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். வரும் 10 ஆண்டுகளிலும் இதை உறுதி செய்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.