நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்.. விவசாயத் துறைக்கு சலுகைகள்..

by எஸ். எம். கணபதி, Feb 1, 2020, 10:55 AM IST

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், மத்திய அரசின் கொள்கைகள் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாடாளுமன்ற மைய அரங்கில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் குடியரசு தலைவர் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது என்று பல்வேறு இக்கட்டான சூழலில், இந்த பட்ஜெட் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத் தொடரில் பொருளாதார பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார். எனவே, பொருளாதார நிலையை மேம்படுத்த புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.
மேலும், விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

அதே போல், நாட்டிலேயே முறையாக வருமான வரி செலுத்தும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வருமான வரிக்கான வருமான உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

You'r reading நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்.. விவசாயத் துறைக்கு சலுகைகள்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை