முதலமைச்சரின் கார் திருட்டு - புதுடெல்லியில் பரபரப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் திருட்டு போயுள்ளது. டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால் கார் திருடப்பட்டுள்ளது.

Arvind Kejriwal Car

கடந்த 2015ஆம் நடைபெற்ற புதுடெல்லி மாநில சட்டமன்ற தேர்தலின் போது, பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர் ஒருவர் நீல நிற சுஸுகி வேகன் ஆர் காரை அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பரிசளித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் காரை தலைமை செயலகத்தில் விட்டு உள்ளே சென்றிருந்தார். மதியம் 01.10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்த காரை மர்ம நபர்கள் திருடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

ஆனால், கார் திருடுபோன சம்பவம் மாலை 03.00 மணி அளவில்தான் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

விஐபி கலாச்சாரத்தை தடுக்கும் பொருட்டு இந்த கார் ‘மொபைல் காராக’ பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் கார் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.