மகாராஷ்டிர மாநிலத்த்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், நான்டெட் வகாலா மாநகராட்சிக்கும், பிர்கான் மும்பை, புனே, கோல்காபூர், நாக்பூர் ஆகிய மாநகராட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கும் புதன்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 81 இடங்களில் வெறும் 2 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. அதே நேரம் காங்கிரஸ் 69 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
நான்டெட் காங்கிரசுக்கு செல்வாக்கான பகுதி என்றாலும், இந்தமுறை எப்படியும் நான்டெட் மாநகராட்சியை கைப்பற்றிவிடுவது என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆனாலும், நான்டெட் மாநகராட்சியில் பாஜக அடைந்துள்ள படுதோல்வி, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்கான் மும்பை, புனே, கோல்கா பூர், நாக்பூர் மாநகராட்சிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 இடம் கிடைத்துள்ளது, பாஜக-வினரை ஆறுதல்படுத்தியுள்ளது.