வியட்நாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 37 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், 16,749 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர, ஆறு மத்திய மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நின் பின் பகுதியில் உள்ள இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக்குழு சென்று பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.