18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Oct 12, 2017, 21:47 PM IST

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியாவின் நவம்பர் 1ஆம் பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து எதிரான டி20 போட்டியுடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

Ashish Nehra

இது குறித்து கூறியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, “ஓய்வு குறித்து அணி நிர்வாகத்திடமும், தேர்வுக் குழு தலைவரிடம் பேசிவிட்டேன். சொந்த மண்ணில் பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு இடையில் ஓய்வு பெறுவதைக் காட்டிலும் வேறு விஷயம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு அறிமுகமான ஆஷிஷ் நெஹ்ரா இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முழங்கால் காயம் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக அணியில் சரியாக இடம்பிடிக்க முடியவில்லை. அதே சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான அணியில் இடம் பிடித்தார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடரில் இடம் பிடிக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தேசிய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். முதல் டி20 போட்டியில் இடம்பெறாத நெஹ்ரா, கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் வலை பயிற்சியின்போது கடினமாக பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின்னர் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

You'r reading 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை