வெறுப்பை விலக்குங்கள் என்று மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாகப் பதில் கொடுத்துள்ளார்.
மோடி நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில்,பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்று கடந்த ஞாயிறன்று எண்ணிக் கொண்டிருந்தேன். விரைவில் உங்களிடம் சொல்கிறேன் என்று பதிவிட்டார். இதற்கு மோடி ஆதரவாளர்கள் மிகவும் கவலையாக ரீட்விட் போட்டனர். நீங்கள்தான் வழிகாட்டி, நீங்கள் விலகக் கூடாது என்று பதிவிட்டனர். அதே சமயம், மோடி எதிர்ப்பாளர்கள், இது நல்ல முடிவு என்ற ரீதியில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடியின் ட்விட்டுக்கு பதில் கொடுத்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதைப் பதிவிட்டு, வெறுப்பை விலக்குங்கள், சமூக ஊடகங்களிலிருந்து விலக வேண்டாம் என்று கிண்டலடித்துள்ளார்.