எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூருக்கு 11ம் தேதி வரை காவல்..

Advertisement

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வங்கியான எஸ் பேங்க், அதிகமான வராக்கடன்களால் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த தடையால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசோ, இந்த வங்கி பிரச்சினைக்கும் முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று வழக்கம் போல் கூறியுள்ளது.
இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ராணா கபூரை, மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இன்று(மார்ச்8) அவரை மும்பை விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>