நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிர்பயா வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பையும், மரியாதையும் உறுதி செய்வது மிக முக்கியமானது.
பெண்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தேசமாக இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும், பெண்களுக்கு அனைத்து துறையிலும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.