கொரோனா வேலையிழப்பு.. தொழிலாளர்களுக்குத் தனது ஊதியத்தை வழங்கும் நீதிபதி..

by எஸ். எம். கணபதி, Mar 21, 2020, 15:35 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க, மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் நாளை முழு அடைப்பு நடத்தப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், நாளை அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எல்லாமே மூடப்படுகின்றன. இதனால், பல லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலையை இழக்கின்றனர்.

இந்த சூழலில், சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது ஊதியத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்குகிறார். மக்கள் ஊரடங்கால் ஒரு நாள் கூலியை இழக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகத் தனது ஒரு மாத ஊதியத்தை(சுமார் ரூ.2.25 லட்சம்) வழங்குவதாகக் கூறியிருக்கிறார். தனது ஊதியத்தைக் காசோலையாக அவர் தலைமைச் செயலாளரிடம் அளிப்பார் என்று ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading கொரோனா வேலையிழப்பு.. தொழிலாளர்களுக்குத் தனது ஊதியத்தை வழங்கும் நீதிபதி.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை