இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு..

Coronavirus 2 more deaths as new cases surge by 99 total now 498.

by எஸ். எம். கணபதி, Mar 24, 2020, 12:16 PM IST

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தொடுகிறது.
உலகம் முழுவதும் தற்போது மூன்றரை லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் நேற்று முன் தினம் வரை 415 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் 468 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், அவர்களில் 40 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று(மார்ச்24) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று 498 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை