ரிசர்வ் வங்கி அறிவிப்பு...
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதம் தவணை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று(மார்ச்27) நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் நடுத்தர மக்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாதத் தவணை செலுத்த சிரமப்படுவார்கள். எனவே, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 3 மாதம் தவணை செலுத்த வேண்டியதில்லை. இந்த தவணை தொகைகள் தள்ளி வைக்கப்படும். வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசம் என்பதை வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் சேர்க்கக் கூடாது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.