கவர்னர் சக்திகாந்ததாஸ் உறுதி..
பொருளாதார நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் மக்கள் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுக்கு ஆபத்து வருமோ என மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்களின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று(மார்ச்27) நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. தற்போது, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட்டுக்கான வட்டிவிகிதம்(ரிவர்ஸ் ரெப்போ) 4.9 சதவீத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகளுக்கு ரிசர்வ் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்(ரெப்போ) 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனவே, வங்கிகளும் தங்களின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கும். வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால் வாடிக்கையாளர்களின் மாதந்திர தவணையும் குறையம். மேலும், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கலாம்.
இந்த சூழ்நிலையில், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்திருக்கும் மக்கள், வங்கிகள் திவாலாகி விடுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. வங்கிகளில் உள்ள மக்களின் டெபாசிட் பணத்திற்கு ரிசர்வ் வங்கி முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.