ரூ. 4 கோடி கொடுத்து உதவி தந்து மிரள வைத்த நடிகர்.

by Chandru, Mar 27, 2020, 12:27 PM IST

பாகுபலி ஹீரோ அசத்தல்..


பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.படத்தில் அசத்தலாக நடித்த அசரவைத்த பிரபாஸ் தற்போது கொரோனா பாதிப்புக்காக பெரும் தொகை கொடுத்து அசர வைத்திருக்கிறார். ரூ 4 கோடி உதவி அறிவித்திருக்கும் பிரபாஸ் 3 கோடியை மத்திய அரசுக்கும், மீதமுள்ள ஒரு கோடியில் தலா 50 லட்சம் வீதம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளுக்கு தந்திருக்கிறார். நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ்பாபு, ராம் சரண் போன்றவர்களும் தங்களது தரப்பில் நிதியுதவி அறிவித்திருக்கின்றனர்.


Leave a reply