விஜய், அனிருத்துடன் வீடியோவில் மாளவிகா சாட்டிங்..

by Chandru, Mar 27, 2020, 12:21 PM IST

ப்ராப்ளம் வில் கம் அண்ட் கோ, சில் பண்ணு மாப்பி..

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போகிறது. மாஸ்டர் பட நட்சத்திரங்களுடன் பட ஹீரோ யின் மாளவிகா மோகனன் சமீபத்தில் செல்போன் வீடியோகாலில் அழைத்துப் பேசினார். விஜய், அனிருத் ஆகியோருடன் அவர் சாட்டிங் செய்தார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் புகைப் படமாக வெளியிட்டிருக்கிறார் மாளவிகா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் ப்ராப்ளம் வில் கம் அண்ட் கோ... கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என்று மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடலை குறிப்பிட்டிருக்கிறார். கொரோனோ விழிப்புணர்வுக்காக ஒதுங்கியிருந்து பேசுவது பற்றிய உரையாடலாக சோப்பின் வீடியோ உரையாடலை மாஸ்டர் டீம் அமைத்திருந்தது.


Leave a reply