கொரோனா வைரஸை விரட்ட ருத்ர யாகம் நடத்திய நடிகை..

by Chandru, Mar 27, 2020, 12:03 PM IST

இயக்குனர் கணவரும் பங்கேற்றார்..

செம்பருத்தி, சூரியன், வீரா,அசுரன், புலன் விசாரணை 2ம் பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வ மணியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு ஆந்திர அரசியலில் ஈடுபட்டுள்ள ரோஜா தற்போது நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார்.கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தனது வீட்டில் ருத்ராபிஷேகம் என்ற யாகத்தை நடத்தினார். இதை வேத வல்லுனர்கள் நடத்தினர். ரோஜா, கணவர் ஆர்கே.செல்வமணி மற்றும் அவர்களது பிள்ளைகள் யாகத்தில் கலந்து கொண்டனர். குடும்பத்துடன் யாகம் நடத்திய வீடியோவை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.


Leave a reply