பீகாரிலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு 86 பேரும், 57 வெளிநாட்டினரும் சென்று கலந்து கொண்டதாகத் தெரியவந்திருக்கிறது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 22ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இந்த மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 515 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்(அலகாபாத்) உள்ள அப்துல்லா மசூதியில் போலீசார் சோதனையிட்டதில் 7 இந்தோனேசியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பீகார் டிஜிபி பாண்டே கூறியதாவது:
பீகாரிலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு 86 பேரும், 57 வெளிநாட்டினரும் சென்று கலந்து கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது. இவர்களில் 48 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிலர் வேறு மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களையும் அடையாளம் காண்பதற்காகப் பிற மாநில அரசுகளிடம் பேசி வருகிறோம். பீகாரைச் சேர்ந்தவர்களில் 17 பேர் பாட்னாவையும், 13பேர் புக்சரையும் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு டிஜிபி பாண்டே தெரிவித்தார்