நாடு முழுவதும் இது வரை 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 109 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. நேற்று(ஏப்.5) வரை 3,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 291 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2வது இடத்தில் தமிழ்நாட்டில் 584 பேருக்கும், 3வதாக டெல்லியில் 528 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதற்கு, டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கும் தொற்று உறுதியானதுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.