கொரோனா வைரஸ் உருவில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கார் ஒன்று ஐதராபாத் வீதிகளில் வலம் வருகிறது.உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியியுள்ளது. இந்தியாவில் இது வரை 5,360 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 164 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கானா பாடல்கள், ஓவியங்கள் மற்றும் விதவிதமான அம்சங்கள் நாள்தோறும் தோன்றி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கொரோனா உருவில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். பின்னர், இதே போன்ற ஹெல்மெட்டுகள், தெலங்கானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரபலமானது.தற்போது கொரோனா உருவில் புதிய கார் ஒன்றை தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. சுதா கார்ஸ் மியூசியம் என்ற நிறுவனம் இந்த கார்களை மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐதராபாத்தில் வலம் வரச் செய்துள்ளது.