உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 34,235 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியானது. இந்நோய்க்கு இது வரை 82,143 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 லட்சத்து 300 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இவர்களில் 12,837 பேர் பலியாகி விட்டனர். இத்தாலியில் 1 லட்சத்து 35,586 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 17,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் இது வரை ஒரு லட்சத்து 41,942 பேருக்கும், பிரான்சில் ஒரு லட்சத்து 9,069 பேருக்கும் கொரோனா ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது வரை 5,360 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 164 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.