மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. எடப்பாடி, மம்தா பங்கேற்பு..

Prime Minister Modi, Chief Ministers, #COVID19.

by எஸ். எம். கணபதி, Apr 27, 2020, 14:25 PM IST

கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்.27) காலை 11 மணியளவில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்படப் பலரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்கள் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டுமென்று பெரும்பாலான முதல்வர்கள் வலியுறுத்தினர். மேலும், சில மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முதல்வர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

You'r reading மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. எடப்பாடி, மம்தா பங்கேற்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை