இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே5) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 46,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 12,727 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3900 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 74 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 14541 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் 548 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 5804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 290 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 4898 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 64 பேர் பலியாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2942 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் 165 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 3550 பேர், உ.பி. 2766, மேற்கு வங்கம் 1259, ராஜஸ்தான் 3061, ஆந்திரப்பிரதேசம் 1650 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.