சிறுபான்மையினரின் உடல் அடக்கம்... இலங்கை அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்..

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் காரணமாகப் பரவி வரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 மிகப்பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதிகளில் கோவிட்-19 ஓரளவு கட்டுக்குள் உள்ளது.


இந்நிலையில், கொரோனாவின் பெயரால் இலங்கையில் மதவாதம் அதிகரித்துள்ளது என்றும், குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பை மதவாத அமைப்புகள் அதிகளவில் தூண்டி வருகின்றன என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
மேலும், இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை அடக்கம் செய்யாமல், உடலை அரசே எரித்து விடுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்றதொரு நடைமுறை இல்லாதபோது, இலங்கையில் மட்டும் நடைபெறும் இத்தகைய நிகழ்வு காரணமாக, இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் குளிப்பாட்டுவது, உடலைத் துணியால் போர்த்துவது, ஜனாஸா எனும் இறுதி தொழுகை நடத்துவது, அடக்கம் செய்வது என்பது கட்டாய கடமையாகும் என்கிறபோது, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை எரியூட்டுவது என்பது மத உரிமைகளை மறுக்கும் அதேவேளையில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் இறந்த உடல்களை தங்கள் மத வழக்கப்படி அடக்கம்தான் செய்து வருகின்றனர். இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை காரணமாக அவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
இத்தகைய நெருக்கடியை நீக்க வலியுறுத்தி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அரசியல் காரணங்களுக்காகக் கோரிக்கையைச் செவிமடுக்க முன்வரவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இறந்த உடலிலிருந்து வைரஸ் வெளியேறி நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்ற இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கும் உயிரியல் காரணங்கள் தவறானவை எனச் சர்வதேச அளவிலான மருத்துவர்களின், உயிரியல் வல்லுநர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில் தான் அடக்கம் செய்யப்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை.

ஆகவே, தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும், உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி