நாடு முழுவதும் 81,970 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில், 2649 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. தினமும் 3, 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 15) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 81,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 27,920 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 1602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், நோய் பாதித்தவர் எண்ணிக்கை 27,524 ஆக அதிகரித்தது. மும்பையில் மட்டுமே 16,579 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இம்மாநிலத்தில் கொரோனாவால் 1019 உயிரிழந்துள்ளனர்.
2வது மாநிலமாக, தமிழகத்தில் 9674 பேருக்கு கொரோனா பாதித்ததில், 66 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 9592 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், 586 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 4534 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 4426 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 3902 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2377 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.