தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ஊரடங்கு தொடரும் நிலையில் சமீபத்தில் திரையுலகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கின. இம்மாத இறுதியில் படத்தின் ரிலீஸ் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகாத நிலையில் அது பற்றியும் அறிவிப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
மாஸ்டர் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. தனக்கும் விஜய்க்கும் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நடந்த உரையாடல் சம்பவத்தை வெளியிட்டார்.
”மாஸ்டர் படப்பிடிப்பின்போது பிகில் படத்தில் விஜய், தான் பாடிய வெறித் தனம் பாடல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். உடனே அந்த பாடலை கூகுலில் தேடிப்பார்த்து விட்டு அவரிடம் பேசும்போது, நன்றாக பாடியிருக்கிறீர்கள் என்றேன். எந்த பாடலமா என்றார். வெறித்தனம் பாடல் என்றேன். அந்த பாடலை கூகிளில் தான் பார்த்தீர்களா? நீங்கள் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள் என்று என்னைக் கலாய்த்தார். பிறகு, என்னுடன் நீங்கள் இணைந்து பாடிய பாடல் எது தெரியுமா? என்றார். அதற்கும் நான் கூகுலில் தேடிப்பார்த்து கூகுல் கூகுல் பண்ணிப்பார்த்தேன் என்ற பாடல் என்றேன். மாஸ்டர் படத்தில் கார் சேசிங் காட்சி ஒன்று மிகவும் அற்புதமாகப் படமாகி இருக்கிறது. அப்படத்தில் அது பரபரப்பாக பேசப்படும் காட்சியாக இருக்கும்என்றார்.