இந்தியாவில் ஒரே நாளில் 7466 பேருக்கு கொரோனா பாதிப்பு..

by எஸ். எம். கணபதி, May 29, 2020, 12:08 PM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65,799 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இன்று(மே 26) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 60,490 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 80,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் நேற்று உயிரிழந்த 146 பேரையும் சேர்த்து இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 4167 ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 48 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கும், குஜராத்தில் 14,500 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.


More India News