இந்தியாவில் 70 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. சராசரியாகத் தினமும் 9 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது.
இந்தியாவில் தினமும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் தினமும் 500, 600 பேருக்குத்தான் கொரோனா பரவியது. கடந்த 2 நாட்களாகத் தினமும் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்படுகிறது.
நேற்று முன் தினம் 9851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 9887 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. நேற்று மட்டுமே 294 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 6642 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2லட்சத்து 36,657 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 14,073 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 15,942 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.