இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள், புனித ஹஜ்பயணமாக மக்கா, மதினாவுக்கு செல்வார்கள். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் செல்லும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் இருந்து ஹஜ்பயணம் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது;இந்தியாவில் இருந்து இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரைக்குச் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்போம். இந்த ஆண்டு விண்ணப்பித்த 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கட்டணத்தில் எதுவும் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும்.
இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.