தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.இந்தியாவில் தற்போது 5 லட்சத்து 48,318 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 16,475 பேர் பலியாகியுள்ளனர். இது வரை 83 லட்சத்து 98362 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் 2 லட்சத்து 2955 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 4118 பேர் பலியாகியுள்ளனர். 12 லட்சத்து 35,153 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஒரு லட்சத்து 33,978 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 1695 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 7 லட்சத்து 15098 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் 52,812 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 2720 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 7 லட்சத்து 53,370 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
ஆப்கனிஸ்தானில் 30,967 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 729 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 70,788 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.நேபாளத்தில் 12,309 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 28 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 4910 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் 2033 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 1226 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.