லண்டனில் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் ரஜினி நடிகை..

Radhika Apte used her break time to write scripts

by Chandru, Jun 29, 2020, 14:15 PM IST

ரஜினிகாந்த் ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கொரோனா லாக்டவுனில் கணவரின் ஊரான லண்டனில் பொழுதைக் கழிக்கிறார். வெட்டியாக இந்த நாட்களைக் கழிக்காமல் ஸ்கிரிப்ட் எழுதுவதில் கவனம் செலுத்துகிறார்.
இதுபற்றி ராதிகா ஆப்தே கூறும்போது.இந்த நெருக்கடியான நேரத்தில் நெட்பிளிக்ஸில் எனது வலை தொடர்களை பலரும் பார்த்துப் பாராட்டி உள்ளனர். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

மேலும் ஸ்கிரிப்ட் எழுதும் பணியிலும் எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது பற்றியும் நான் திட்டமிட்டு வருகிறேன் என்றார்.தமிழில் அடக்க ஒடுக்கமாக ராதிகா ஆப்தே நடித்திருந்தாலும் 'பார்ச்ட்', 'பத்ல்ப்பூர்' மற்றும் 'அந்தாதுன்' போன்ற திரைப்படங்களில் படுகவர்ச்சி டாப்லெஸ்ஸாக நடித்து எதிர்மறை விமர்சனங்களை வாங்கிகட்டி கொண்டிருக்கிறார். அது அவருக்குத் திருப்தியாக இல்லாவிட்டாலும் ஒடிடியில் அவருக்குக் கிடைக்கும் நல்ல பெயர் திரைப்பெயர்களை மறக்கடிக்கச் செய்கிறதாம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை