டோலிவுட் ஹீரோவை இயக்குகிறார் அட்லி. பேச்சு வார்த்தை தொடக்கம்..

Bigil Director Atlees project with NTR takes a step ahead

by Chandru, Jun 29, 2020, 14:33 PM IST

தெறி, மெர்சல், பிகில் எனத் தளபதி விஜய்யின் 3 ஹிட் படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜய் படத்தை இயக்க காத்திருக்கிறார். விஜய்யோ ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், சசிகுமார் போன்றவர்களின் படங்களில் நடிக்கக் கதை கேட்டிருக்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். எனவே அட்லி வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் தமிழ். தெலுங்கு படமொன்றை ஜுனியர் என் டி ஆர் நடிக்க இயக்கவிருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தையும் அவ்வப்போது நடந்து வருகிறது. அப்படமும் அடுத்த 2 படங்களுக்கு பிறகே ஜுனியர் என்டிஆர் நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கிறார். இப்படம் 5 மொழிகளில் வெளியாகவிருப்பதால் இந்திய அளவில் தனக்குப் பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். அடுத்து கேஜி எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க விருப்பதாக தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை