இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. இந்நோயால் 21,604 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இந்நோய்ப் பாதிப்பு தற்போது 8 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் நேற்று(ஜூன்9) புதிதாக 26,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 93,802 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 லட்சத்து 95,513 பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2.76 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்க்கு நேற்று 475 பேர் பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து நாடு முழுவதும் இது வரை 21,604 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 32 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 17 லட்சம் பேருக்கு நோய் பரவியிருக்கிறது. 3வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 30,599 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இங்கு 9667 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 26,581 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 1765 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் ஒரு லட்சத்து 7051 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 3258 பேர் பலியாகியுள்ளனர்.