பிரெஞ்சு பிரதமர் இமானுவேல் மேக்ரான் தனது இரண்டாம் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தனது ஒரு வாரப் பயணத்தைக் குடுமத்துடன் செலவிட்டப் பின்னர் கடந்த வாரம் கனடா கிளம்பினார். இதன் பின்னர் இன்று காலை பிரெஞ்சு பிரதமர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவியுடன் இன்று தனது இந்தியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மேக்ரானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் சென்று வரவேற்றார். உடன் பிரதமர் மோடியும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றார்.
இந்தியா- பிரெஞ்சு இடையே அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக கூட்டுறவுக்காக இந்த இந்தியப் பயணம் என பிரதமர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் அதிகாரப்பூர்வ சந்திப்புகள் மற்றும் கூட்டங்கள் நிறைவுற்றதும் பிரதமர் மோடியுடன் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் மேக்ரான் படகுப்பயணம் செய்ய உள்ளார் என்பது தான் பிரெஞ்சுப் பயணத்தின் கூடுதல் சிறப்பம்சமாம்.