நாடு முழுவதும் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா...

COVID19 cases in India cross 11.5 Lakhs

by எஸ். எம். கணபதி, Jul 21, 2020, 14:40 PM IST

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை கொரோனாவால் 28 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 100 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று கூடி, இப்போது தினமும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று புதிதாக 37,148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11 லட்சத்து 55,191 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், கொரோனா நோயாளிகள் 587 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துள்ளது.உலக அளவில் நோய்ப் பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 38 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 21 லட்சம் பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவு கொரோனா பாதித்திருக்கிறது.

You'r reading நாடு முழுவதும் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா... Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை