கொரோனா காலத்தில் பாஜகவின் சாதனைகள்.. ராகுல்காந்தி கிண்டல்..

by எஸ். எம். கணபதி, Jul 21, 2020, 14:59 PM IST

கொரோனா தொற்று பரவும் காலத்தில் மத்திய பாஜக அரசு செய்த சாதனைகள் என்று 6 விஷயங்களைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் சீனப் பிரச்சனை, கொரோனா பரவல், பொருளாதார நிலைமை போன்றவை குறித்து பல்வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் கமென்ட்ஸ் போட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது :
கொரோனா காலத்தில் மத்திய அரசு புரிந்த சாதனைகள் தெரியுமா.., பிப்ரவரி--நமஸ்தே டிரம்ப், மார்ச்--மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்--எல்லோரையும் மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே-- மோடி அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-- பீகாரில் ஆன்லைன் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளின் மூலம் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் நாடு, தன்னிறைவு பெற்று விட்டது.இவ்வாறு கிண்டல் செய்துள்ளார் ராகுல் காந்தி.


Leave a reply

Speed News

  • பெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது

     

    பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது. 

    இந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட  இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார். 

    Aug 14, 2020, 10:15 AM IST

  • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை

    ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

    சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

    இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 

    Aug 10, 2020, 14:48 PM IST

  • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

    Aug 10, 2020, 14:41 PM IST

  • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..

    குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

    Aug 10, 2020, 14:33 PM IST

  • ராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

    இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

    Aug 10, 2020, 14:31 PM IST

More India News