ரோகித், மாரியப்பனுக்கு கேல் ரத்னா, இஷாந்துக்கு அர்ஜுனா! -விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

Kale Ratna for Rohit, Mariappan, Arjuna for Ishant! -Sports Awards Announcement

by Sasitharan, Aug 21, 2020, 18:23 PM IST

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்யும். அதன்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், மற்ற வீரர்கள் மற்ற விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

அதன்படி விருது பெறுபவர்களின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்ட மொத்தம் 27 பேருக்கு ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரோகித், மாரியப்பனுக்கு கேல் ரத்னா, இஷாந்துக்கு அர்ஜுனா! -விளையாட்டு விருதுகள் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை