மினிமம் பேலன்ஸ்க்கான பிடித்தத்தொகையில் மாற்றம்: புதிய விதிமுறையை அறிவித்த ஸ்டேட் பாங்க்!

by Rahini A, Mar 13, 2018, 20:12 PM IST

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸ் தொகைக்கான பிடித்தத்தொகையில் மாற்றம் செய்யவுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய நிதியாண்டுக்கான திட்டம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் அடிப்படையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்களுக்கான அபராதப் பிடித்தத் தொகையாக இதுவரையில் ஜி.எஸ்.டி உடன் இணைந்து 50 ரூபாய் மாதம் பிடித்தம் செய்யப்பட்ட் வந்தது.

இந்தத் தொகையில் 75 சதவிகிதத்தைக் குறைத்து வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அடிப்படையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்களுக்கு இனி மாதம் 15 ரூபாய் மட்டுமே அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மினிமம் பேலன்ஸ்க்கான பிடித்தத்தொகையில் மாற்றம்: புதிய விதிமுறையை அறிவித்த ஸ்டேட் பாங்க்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை