இந்தியாவில் இது வரை 3 கோடி 53 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 38 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைகளைத் தினமும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது வரை நாடு முழுவதும் 3 கோடியே 52 லட்சத்து 92,226 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 8 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 26,106 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா நோயில் இருந்து குணம் அடைபவர்களும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் (ஆக.23) மட்டுமே 57,989 பேர் நோயில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். மொத்தத்தில் 22 லட்சத்து 80,566 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது நாடு முழுவதும் 15 லட்சத்து 72, 898 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.