முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை உச்சநீதிமன்றத்தில் தகவல்

Mullaiperiyar dam is safe, central water commission

by Nishanth, Aug 25, 2020, 14:30 PM IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு மறுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களாக நடந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அணை பாதுகாப்பாக இருப்பதால் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த அணையில் பலமுறை136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரசல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை இடுக்கி மாவட்டத்தில் 62 முறை நில அதிர்வு ஏற்பட்டன. பெரும்பாலும் முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. அடிக்கடி ஏற்படும் இந்த நில அதிர்வுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். எனவே கேரளாவில் மழைக் காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள மாதங்களில் .அணையின் நீர்மட்டத்தை 130 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது எனத் தமிழகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இன்று மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். அவர் கூறுகையில், அணைக்கட்டில் தற்போது 130 அடி தண்ணீர் உள்ளது. கடந்த 10 வருடங்களாக அணையின் சராசரி நீர்மட்டம் 123.21 அடி ஆகும். எனவே அணை பாதுகாப்பாக இல்லை என்பது தவறாகும் என்று கூறினார். இதற்கிடையே இந்த வழக்கை விசாரிப்பதில் 4 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார் இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

You'r reading முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை உச்சநீதிமன்றத்தில் தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை