கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானதாக பொய் தகவல் துபாயில் 2 டிவி ஊழியர்கள் கைது

Two tv channel staffs arrested in dubai for spreading fake news about covid 19

by Nishanth, Aug 26, 2020, 11:02 AM IST

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா குறித்து பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள ஒரு பிரபல டிவி சேனலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவல் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவல் உண்மை அல்ல என்பதால் இதுகுறித்து விசாரிக்கத் துபாய் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து செய்தி ஒளிபரப்புத் துறை விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த டிவி சேனலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் செய்தி எந்த சூழ்நிலையில் ஒளிபரப்பப்பட்டது, அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துபாய் அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.

You'r reading கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானதாக பொய் தகவல் துபாயில் 2 டிவி ஊழியர்கள் கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை