19 குற்றவாளிகள்.. 200 கிலோ வெடிபொருள்!.. புல்வாமா வழக்கின் அதிர்ச்சி குற்றப்பத்திரிக்கை

Advertisement

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது.

இந்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலான நிலையில் நேற்று இந்த வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் உள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகையில், 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இருக்கிறது. எனினும், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் அரசுத்துறையினருக்கு சம்பவத்தில் நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த விவரமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அஸார், அவரது சகோதரர் முஃப்தி அப்துல் ரெளஃப் அஸ்கர், அவரது துணைத்தளபதி மரூஃப் அஸ்கர் ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் 6 பேர், மசூத் அஸார், ரெளஃப் அஸ்கர், அம்மார் ஆல்வி, மொஹம்மத் இஸ்மாயில், சமீர் அகமது தர், அஷக் அகமது நெங்ரூ ஆகியோர்தான். இதில் சமீர் அகமது மட்டும் புல்வாமாவை சேர்ந்தவர். மற்ற ஐந்து பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

மேலும் ஷகீர் பஷீர், இன்ஷா ஜான், பீர் தாரீக் அகமது ஷா, வைஸ் உல் இஸ்லாம், மொஹம்மத் அப்பாஸ் ராத்தெர், பிலால் அகமது குச்சே, மொஹம்மத் இக்பால் ராத்தெர் ஆகியோர் தற்போது என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றப்பத்திரிகையில், ``வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த முகமது உமர் ஃபரூக் (மசூத் அஸாரின் மருமகன்) 2018-ல் எல்லை பகுதியைக் கடந்து இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் நுழைந்தார். உமர் ஃபாரூக்கிற்கு இக்பால் ராத்தெர் உதவி செய்துள்ளார். உமர் ஃபரூக், உள்ளூரில் கிடைத்த உதவியுடன், மிகப்பெரிய அளவிலான வெடிபொருளை சேகரித்துள்ளார். அடில் அகமது தர், சிஆர்பிஎஃப் வாகனத்தைத் தாக்க உதவியுள்ளார்.

தாக்குதலுக்காக 2019 ஜனவரி மாதமே ஒரு காரை வாங்கிய சஜ்ஜத் அகமது பட், அதை ஷகிர் பஷின் வீடு முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது வைஸ் உல் இஸ்லாம், மொஹம்மத் இஸ்மாயில் கூறியபடி 4 கிலோ அமோனியம் பவுடரை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜனவரி மாத கடைசியில், மொஹம்மத் உமர் ஃபரூக், சமீர் தர், அடில் தர் ஆகியோர் இன்ஷா ஜன் வீட்டில் தயாரித்த பிரசார காணொளியில் தற்கொலை குண்டுவெடிப்பு முழக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பிப்ரவரி மாதம் மொஹம்மத் உமர் ஃபரூக், சமீர் அகமது தர், அடில் அகமது தர், ஷகிர் பஷிர் ஆகியோர் ஆர்டிஎஸ் வெடிபொருள், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், அலுமினியம் பவுடர் போன்றவை மூலம் 200 கிலோ எடையுள்ள வெடி பொருட்களையும் இரண்டு கன்டெய்னர்களில் தயாரித்து அதை வாகனத்தில் பொருத்தியுள்ளனர். அந்த 200 கிலோ வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தையே சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்துகள் மீது மோதச் செய்து தங்கள் திட்டத்தை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நிறைவேற்றியுள்ளது" என அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>