கொரோனா காலத்தில் 20 கோடி பரிசு...இந்தியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்...!

by Nishanth, Sep 3, 2020, 18:45 PM IST

அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த 219வது குலுக்கலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருக்கு முதல் பரிசான ₹ 20 கோடி கிடைத்தது. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பரிசு விழுந்த விவரத்தை குர்பிரீத் சிங்குக்கு போன் செய்து தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி பிக் டிக்கெட் அதிகாரிகள் அவரை போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். ஆனால் யாரோ தன்னை ஏமாற்றுவதாக நினைத்து முதலில் குர்பிரீத் அதை நம்பவில்லை. பின்னர்தான் அது உண்மை என தெரிய வந்தது. இந்த கொரோனா காலத்தில் தனக்கு கிடைத்த இந்த பரிசு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக குர்பிரீத் கூறுகிறார். அடுத்த குலுக்கல் அக்டோபர் 3ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை