பஞ்சாப்பில் போலீஸ் விற்கும் கொரோனா கிட்.. விலை மலிவு..

by எஸ். எம். கணபதி, Sep 6, 2020, 09:28 AM IST

பஞ்சாப்பில் கொரோனா கேர் கிட் என்ற பெயரில், மாத்திரைகள் அடங்கிய பார்சலை போலீசார் விற்பனை செய்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை மருந்துகள் மற்றும் உணவுகளை எடுத்து கொள்ள டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கபசுரக்குடிநீர், இம்ப்ரோ, வைட்டமின் மாத்திரைகளை மக்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.


இந்நிலையில், பஞ்சாப்பில் போலீசாரே கொரோனா கேர் கிட் என்ற பெயரில் மலிவு விலையில் ஒரு பார்சலை விற்கின்றனர். இது குறித்து மாநில டிஜிபி அகர்வால் கூறுகையில், வைட்டமின், ஜின்க் மாத்திரைகள், ஆக்சிமீட்டர் உள்பட 18 பொருட்கள் இந்த பையில் இடம் பெற்றிருக்கின்றன. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அதிகபட்ச விலை ரூ.3978 ஆகும். ஆனால், போலீஸ் கேண்டீன்களில் இதை ரூ.1700க்கு விற்பனை செய்கிறோம். யாரும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.


More India News

அதிகம் படித்தவை